போலீஸ் உளவாளி மீது கொலை வெறி தாக்குதல்- 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
|தானே மாவட்டம் அம்பிவிலி லாகுஜி நகர் பகுதியில் போலீஸ் உளவாளி மீது கொலை வெறி தாக்குதல்
அம்பர்நாத்,
தானே மாவட்டம் அம்பிவிலி லாகுஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் யூசுப்(வயது 28). போலீஸ் உளவாளியாக இருந்து வருகிறார். நேற்று இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தனர். ஜாபர் யூசுப்பின் முகத்தில் ஸ்பிரேவை தெளித்தனர். பின்னர் கும்பல் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், தங்கச்சங்கிலி பறிப்பு மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் தான் அவர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.