< Back
மும்பை
இடஒதுக்கீடு கேட்டு தங்கர் சமூகத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
மும்பை

இடஒதுக்கீடு கேட்டு தங்கர் சமூகத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
25 Oct 2023 1:30 AM IST

இடஒதுக்கீடு கேட்டு தங்கர் சமூகத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சாங்கிலி,

சாங்கிலி மாவட்டம் காவ்தே மகான்கால் தாலுகா அபச்சிவாடியை சேர்ந்தவர் பிருதேவ் கர்ஜே(வயது37). இவர் தங்கர் சமூகத்தினருக்கு ஆதரவாக இடஒதுக்கீடு கேட்டு நடத்தி வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அவரது விவசாய விளை நிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதுபற்றி அறிந்த உம்டி போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். இதில் தங்கர் சமூகத்தினர் கட்டாயம் இடஒதுக்கீடு பெறவேண்டும், இந்த கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடஒதுக்கீடுக்காக தங்கர் சமூகத்தை சேர்ந்த பிருதேவ் கர்ஜே தனது வாழ்க்கையை முடித்து கொண்டது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பா.ஜனதா எம்.எல்.சி. கோபிசந்த் படல்கர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்