< Back
மும்பை
மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் அடித்து கொலை - 11 பேர் கைது
மும்பை

மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் அடித்து கொலை - 11 பேர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

மாட்டிறைச்சி கடத்தியதாக வாலிபரை அடித்து கொன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மாட்டிறைச்சி கடத்தியதாக வாலிபரை அடித்து கொன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

மும்பை குர்லாவை சேர்ந்தவர் அர்பான் அன்சாரி (வயது32), அவரது கூட்டாளி நசீர் குரோஷி (24). கடந்த 24-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் காரில் 2 பேரும் நாசிக் அருகே இகத்புரி பகுதியில் உள்ள கோட்டி-சின்னார் சாலையில் மும்பை நோக்கி வந்தனர். கம்பீர்வாடி அருகே வந்தபோது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தனர். அதில் சோதனை நடத்திய போது இறைச்சி இருந்ததை கண்டனர். இதனால் மாட்டிறைச்சி கடத்தி செல்வதாக கருதிய கும்பல் அவர்களை பிடித்து தாக்கினர். இந்த தாக்குதலில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

11 பேர் கைது

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனி்ன்றி அர்பான் அன்சாரி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க விசாரணை நடத்தினர். கொலையில் தொடர்புடைய 11 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட இறைச்சியை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் செய்திகள்