< Back
மும்பை
மும்பை
கப்பல் பயணத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சீன நாட்டுக்காரர்; கடலோர காவல்படை மீட்டது
|15 Oct 2023 1:30 AM IST
கப்பல் பயணத்தின் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சீன நாட்டவரை கடலோர காவல் படையினர் மீட்டனர்
மும்பை,
மும்பை கடற்கரையின் வழியாக பனாமா நாட்டு கொடியுடன் கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த நிலையில் அந்த கப்பலில் பயணம் செய்த 49 வயதான சீன நாட்டுக்காரர் ஒருவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் நிலைகுலைந்தார். இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர், கப்பலில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவரை மீட்டனர். பின்னர் அவர் மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.