< Back
மும்பை
மும்பை
வீடு தருவதாக கூறி ரூ.1.87 கோடி மோசடி செய்த பெண் ஏஜெண்ட் மீது வழக்கு
|28 Sept 2023 12:45 AM IST
வீடு தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.1.87 கோடி மோசடி செய்த பெண் ஏஜெண்ட் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்
நவிமும்பை,
நவிமும்பை உரண் பகுதியில் உள்ள ஜசாய் என்ற இடத்தில் வீடு தருவதாக கூறி ரியல் எஸ்டேட் பெண் ஏஜெண்ட் ஒருவர் வாடிக்கையாளரிடம் கடந்த ஜனவரி மாதம் முன்பணம் பெற்றிருந்தார். ஆனால் அவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஏஜெண்ட்டை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் வீடு தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.1 கோடியே 87 லட்சம் அளவிற்கு மோசடி நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ரியல் எஸ்டேட் பெண் ஏஜெண்ட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.