< Back
மும்பை
சிறுமியை திருமணம் செய்து கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
மும்பை

சிறுமியை திருமணம் செய்து கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
15 Sept 2022 6:53 PM IST

தானேயை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

தானே,

தானேயை சேர்ந்த 15 வயது சிறுமியை அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு கடந்த மே மாதம் 15-ந்தேதி அங்குள்ள மசூதியில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இதன்பின்னர் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் சென்று குடிபெயர்ந்தனர். அங்கு வைத்து சிறுமியை வாலிபர் கற்பழித்து உள்ளார். மேலும் பாலியல் ரீதியாக சிறுமி துன்புறுத்தப்பட்டாள். கணவரது கொடுமை தாங்க முடியாத சிறுமி கடந்த மாதம் தானேயில் வசிக்கும் பெற்றோர் வீட்டிற்கு திரும்பினாள். தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். இது பற்றி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்படி போலீசார் குழந்தை திருமண தடைசட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்