< Back
மும்பை
பஸ் நிறுத்தம் அருகே படுத்து உறங்கியவர்கள் மீது கார் மோதல்- 4 பேர் படுகாயம்
மும்பை

பஸ் நிறுத்தம் அருகே படுத்து உறங்கியவர்கள் மீது கார் மோதல்- 4 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
1 Sept 2022 7:15 PM IST

பஸ் நிறுத்தம் அருகே உறங்கி கொண்டிருந்த கேண்டீன் ஊழியர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

அம்பர்நாத்,

பஸ் நிறுத்தம் அருகே உறங்கி கொண்டிருந்த கேண்டீன் ஊழியர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கார் மோதி விபத்து

தானே மாவட்டம் கல்யாண் டவுண் பகுதியில் மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் கடந்த 31-ந் தேதி இரவு கேண்டீனில் வேலை பார்த்து வந்த சிலர் படுத்து உறங்கினர். மறுநாள் அதிகாலை 2.30 மணி அளவில் அங்கு வேகமாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த மகாத்மாபுலே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் கார் டிரைவரின் அடையாளம் தெரியவந்தது. இருப்பினும் அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் மது போதையில் கார் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்