< Back
மும்பை
குளத்தில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி; பிவண்டியில் சோகம்
மும்பை

குளத்தில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி; பிவண்டியில் சோகம்

தினத்தந்தி
|
17 Oct 2023 12:45 AM IST

குளத்தில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியான சம்பவம் பிவண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தானே,

குளத்தில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியான சம்பவம் பிவண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குளத்தில் குளிக்க சென்றனர்

தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் தாமன்காவ் பகுதியில் உள்ள குளத்துக்கு நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றனர். சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்த போது 12 வயது சிறுமியும், 7 வயது சிறுவனும் ஆழமான இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர்.

சிறுவன், சிறுமி பலி

அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கிய சிறுமி, சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியான சம்பவம் பிவண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்