நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது
|நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி கற்பழிப்பு
நாக்பூரில் வசித்து வரும் 11 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் 19-ந் தேதி கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ரோஷன் (வயது29) சிறுமியின் வீட்டுக்கு வந்தார். அவர் சிறுமிக்கு பணம் தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தார். சிறுமி நடந்ததை வெளியில் சொல்ல கூடாது என அவர்கள் பணம் கொடுத்தனர்.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களில் 3 பேர் மிரட்டி சிறுமியை கற்பழித்தனர். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி கஜனன் (40) என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.
9 பேர் கைது
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரை கடந்த ஒரு மாதத்தில் 9 பேர் மிரட்டி கற்பழித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியை கற்பழித்த ரோஷன், கஜனன், பிரேம்தாஸ், ராஜேஸ், கோவிந்தா, சவுரப், நிதேஷ், பிரதும்னா, நிக்கில் ஆகிய 9 பேரை கைது செய்தனர். 11 வயது சிறுமியை ஒரு மாதமாக கும்பல் மிரட்டி கற்பழித்த சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
------------------