< Back
மும்பை
80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி- ஒருவர் கைது
மும்பை

80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி- ஒருவர் கைது

தினத்தந்தி
|
10 July 2022 11:11 PM IST

மின் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்பி 80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மின் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்பி 80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.

நூதன மோசடி

மும்பையில் சமீபநாட்களாக மோசடி கும்பல் ஒன்று மின் நுகர்வோரை நூதன முறையில் ஏமாற்றி ரூ.1 கோடி வரை அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்துள்ளது.

இதுகுறித்த தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த மோசடி கும்பல் வாடிக்கையாளர்களிடம் தங்களின் முந்தைய மாத மின் கண்டனம் புதுப்பிக்கப்படவில்லை என கூறி செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்புகின்றனர். மேலும் அந்த குறுந்தகவலில் தகவலை பெற இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கூறி தங்கள் தொலைபேசி எண்ணையும் குறிப்பிடுகின்றனர்.

ரூ.1 கோடி அபஸே்

இந்த குறுந்தகவலை பார்த்து அதில் உள்ள நம்பரில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் உங்கள் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. அதை உடனடியாக செலுத்தவில்லை எனில் இன்று இரவு உங்கள் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்று பயமுறுத்துகின்றனர்.

இதை நம்புபவர்களிடம் ஆன்லைன் மூலம் உடனடியாக பணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதாக கூறி அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெறுகின்றனர்.

இந்த வங்கி கணக்கு விவரங்களை வைத்து அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்கின்றனர். பெரும்பாலும் இந்த கும்பல் மூத்த குடிமக்களையே குறி வைக்கின்றனர்.

அவர்களை எளிதாக ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதுவரை 80 பேரின் வங்கி கணக்கில் இருந்து இதே பணியில் ரூ.1 கோடியே 6 லட்சம் வரை பறித்துள்ளனர்.

கைது

மும்பையில் பல்வேறு புறநகர் பகுதிகளில் உள்ள 40 போலீஸ் நிலையங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடிக்கு ஆளானவர்களில் டாக்டர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், கடற்படை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், என்ஜீனியர்கள், வணிகர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அடங்குவர். அந்தேரி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் இதே பணியில் ரூ.11 லட்சத்து 80 ஆயிரத்தை மோடி செய்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் சைபர் போலீசாருடன் இணைந்து, உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்