< Back
மும்பை
தானேயில் மாந்திரீக வேலையில் ஈடுபட்ட 8 பேர் கைது
மும்பை

தானேயில் மாந்திரீக வேலையில் ஈடுபட்ட 8 பேர் கைது

தினத்தந்தி
|
27 Sept 2022 11:00 AM IST

தானே மாவட்டம் முர்பாடு, சோன்காவ் பகுதியில் மாந்திரீக வேலையில் ஈடுபட்ட 8 பேர் கைது

தானே,

தானே மாவட்டம் முர்பாடு, சோன்காவ் பகுதியில் சிலர் மாந்திரீகம் மற்றும் பில்லிசூனிய வேலையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சிலர் மாந்திரீக வேலையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 போலி மந்திரவாதி, 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

இதேபோல போலீசார் மாந்திரீக சடங்கில் கலந்து கொள்ள வந்த 19, 26 வயதுடைய 2 பெண்களையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்