< Back
மும்பை
ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு 7,880 தேர்வர்கள் தகுதி நீக்கம்
மும்பை

ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு 7,880 தேர்வர்கள் தகுதி நீக்கம்

தினத்தந்தி
|
4 Aug 2022 11:43 PM IST

ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 7 ஆயிரத்து 880 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை,

ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 7 ஆயிரத்து 880 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு மோசடி

புனே சைபர் கிரைம் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2020-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தனர்.

மாநில தேர்வாணைய முன்னாள் கமிஷனர் துக்காராம் சுபே பணம் வாங்கி கொண்டு, பல தேர்வர்களின் மதிப்பெண்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் வினாத்தாள் தயார் செய்யும் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஏஜெண்டுகள் உள்பட பலரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

7,880 பேர் தகுதி நீக்கம்

இந்தநிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சுமார் 7 ஆயிரத்து 880 தேர்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பணம் கொடுத்து மதிப்பெண்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாநில தேர்வாணையம் 7 ஆயிரத்து 880 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து உள்ளது. மேலும் அவர்கள் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவும் தடை விதித்து உள்ளது.

இந்த தகவலை தற்போதைய தேர்வாணைய கமிஷனர் சைலஜா தாரதே கூறினார்.

மேலும் செய்திகள்