தானே மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் போதைப்பொருள் வழக்கில் 771 பேர் கைது
|தானே மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 660 போதைப்பொருள் வழக்குகளில் 771 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தானே,
தானே மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 660 போதைப்பொருள் வழக்குகளில் 771 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ரூ.3 கோடி பொருட்கள்
தானே மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை போதைப்பொருள் தொடர்பான 660-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இது தொடர்பாக 771 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த காலகட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3 கோடியே 68 லட்சத்து 86 ஆயிரத்து 698 மதிப்புள்ள போதைப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. குறிப்பாக இந்த காலகட்டத்தில் கஞ்சா தொடர்பான 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 53 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரூ.1 கோடியே 16 லட்சத்து 46 ஆயிரத்து 518 மதிப்புள்ள 739 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 64 லட்சத்து 92 ஆயிரத்து 870 மதிப்புள்ள 1,585 கிலோ எடையுள்ள மெபட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஒருக்கிணைப்புகுழு கூட்டம்
சரஸ் போதைப்பொருள் 6 வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 12 பேர் கைது செய்யபட்டனர். அவர்களிடம் 72 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல 58 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கொகைன், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள எல்.எஸ்.டி. போதைப்பொருள், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 13 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டு உள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது அதிகாரிகள் இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டனர்.