< Back
மும்பை
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது
மாவட்ட செய்திகள்
மும்பை

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது

தினத்தந்தி
|
29 Jun 2022 11:28 PM IST

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கடந்த 8-ந்தேதி பால்கர் நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்து அவரை வழிமறித்தனர். பின்னர் அவரை இரும்பு கம்பியால் தாக்கி மிளகாய் பொடி தூவினர். இதன்பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் இருந்ததை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் வழிப்பறி சம்பவத்தில் கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இக்கும்பலை சேர்ந்தவர்கள் குஜராத் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் தனிப்படை அமைத்து அங்கு சென்றனர். வழிப்பறி கும்பலை சேர்ந்த 19 முதல் 40 வயதுக்குட்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள், கார் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்