கோவண்டியில் சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுமிகள் மாயம்- 2 பேர் திரும்பி வந்தனர்
|கோவண்டி சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுமிகள் மாயமாகினர். அவர்களில் 2 பேர் திரும்பி வந்தனர்.
மும்பை,
கோவண்டி சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுமிகள் மாயமாகினர். அவர்களில் 2 பேர் திரும்பி வந்தனர்.
திடீர் மாயம்
மும்பை கோவண்டியில் சயான்-டிராம்பே பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்த 15 முதல் 17 வயது வரையிலான சிறுமிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென மாயமாகி விட்டனர்.
சீர்திருத்த பள்ளியின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக சிறுமிகள் தப்பியது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
2 பேர் திரும்பினர்
இந்த நிலையில் மாயமான சிறுமிகளில் 2 பேர் சில மணி நேரத்தில் அவர்களாகவே சீர்திருத்த பள்ளிக்கு திரும்பி வந்தனர்.
மற்ற சிறுமிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஜன்னல் கம்பியை உடைத்தது சிறுமிகள் அல்ல என்றும், அவர்களை தப்பிக்க செய்வதற்காக யாரோ அவற்றை உடைத்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.