< Back
மும்பை
மும்பை
தானேயில் கழிமுகத்தில் விழுந்து 5 வயது சிறுவன் பலி
|28 July 2022 9:15 PM IST
தானேயில் கழிமுகத்தில் விழுந்து 5 வயது சிறுவன் பலியானான்.
தானே,
தானே காய்முக் பகுதியை சேர்ந்த சிறுவன் ருத்ரா பிமா(வயது5). இவன் இன்று மதியம் 2.30 மணியளவில் வீட்டருகே உள்ள கழிமுகப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றான். இதில் சிறுவன் எதிர்பாராதவிதமாக கழிமுகப்பகுதியில் உள்ள தண்ணீரில் விழுந்தான். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் ½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவனை கழிமுகத்தில் இருந்து பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தானே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 வயது சிறுவன் கழிமுகப்பகுதியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தானேயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.