மசாஜ் பார்லரில் விபசாரம்:- மேலாளர் உள்பட 5 பேர் கைது
|மசாஜ் பார்லரில் விபசார தொழில் நடத்தி வந்த மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பெண்களை மீட்டனர்.
மும்பை,
மசாஜ் பார்லரில் விபசார தொழில் நடத்தி வந்த மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பெண்களை மீட்டனர்.
விபசாரம்
மும்பை லோயர் பரேல் பகுதியில் உள்ள மால் ஒன்றில் மசாஜ் பார்லர் இயங்கி வருகிறது. இங்கு விபசாரம் நடந்து வருவதாக என்.எம். ஜோஷி மார்க் போலீசில் புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் போலி வாடிக்கையாளர் அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் அங்கு விபசாரம் நடந்து வருவது உறுதியானது.
இதன்பேரில் போலீசார் அங்கு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய்லாந்து நாட்டை ேசர்ந்த 6 பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
5 பேர் கைது
மேலும் மசாஜ் பார்லர் மேலாளர் அலிசன் ரோட்ரிக்ஸ், வாடிக்கையாளர்கள் நவின் பாசின், சுனில் மோர்கர், மிலன் ஜெயின், சதான்சிங் ஆனந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் பார்லரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.