< Back
மும்பை
மும்பை
தாக்குர்லியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
|30 Aug 2022 7:34 PM IST
தானே மாவட்டம் தாக்குர்லி பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
தானே,
தானே மாவட்டம் தாக்குர்லி பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் குடிசை வீட்டின் பின்புறம் 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்ததை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சாலையில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இந்த கும்பலில் இருந்த 2 சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.