< Back
மும்பை
தானேயில் டெம்போவில் கடத்தி வந்த 460 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது
மும்பை

தானேயில் டெம்போவில் கடத்தி வந்த 460 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

தினத்தந்தி
|
15 July 2022 9:22 PM IST

தானேவிற்கு டெம்போவில் கடத்தி வரப்பட்ட 460 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தானே,

தானேவிற்கு டெம்போவில் கடத்தி வரப்பட்ட 460 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல்

பிவண்டியில் இருந்து தானேக்கு போதைப்பொருள் கடத்தி வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தானே-பிவண்டி சாலையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் டெம்போவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 110 கிலோ எடையுள்ள கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், டெம்போ டிரைவர் அம்பாலால் ஜாட் (வயது30) என்பவரை கைது செய்தனர்.

கைது

இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கூட்டாளியான பிவண்டி கசேலி பகுதியை சேர்ந்த விகாஸ் சவுபே என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் பிவண்டி சென்று விகாஸ் சவுபே வீட்டில் நடத்திய சோதனையில், மேலும் 350 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விகாஸ் சவுபேவையும் கைது செய்தனர். மேலும் தானேயை சேர்ந்த சிலருக்கு இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்