< Back
மும்பை
மும்பை
நகை வியாபாரி அலுவலக ஊழியரிடம் ரூ.40 லட்சம் தங்கம் கொள்ளை
|25 July 2022 10:50 PM IST
நகை வியாபாரியின் அலுவலக ஊழியரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.
மும்பை,
தென்மும்பை புலேஷ்வர் பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் சம்பவத்தன்று இரவு 2 தங்க பிஸ்கட்டுகளை கல்யாணில் உள்ள நகை வியாபாரியின் வீட்டுக்கு கொண்டு சென்றார். இந்தநிலையில் அந்த ஊழியரை புலேஷ்வரில் இருந்து 4 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் கல்பாதேவி பகுதியில் வைத்து நகை வியாபாரியின் அலுவலக ஊழியரிடம் திடீரென தகராறு செய்தனர். அப்போது அவர்கள் ஊழியரிடம் இருந்த பையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 2 தங்க பிஸ்கட், ஆபரணங்கள் இருந்து உள்ளன.
இதுகுறித்து பைதோனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை வியாபாரியின் அலுவலக ஊழியரிடம் ரூ.40 லட்சம் தங்கத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.