< Back
மும்பை
விமான நிலையத்தில் ரூ.70 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்
மும்பை

விமான நிலையத்தில் ரூ.70 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
18 Oct 2023 6:45 PM GMT

மும்பை விமான நிலையத்தில் ரூ.70 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.70 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்.

போதைப்பொருள்

மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். இதில் கேப்சூல் வடிவில் கொகைன் போதைப்பொருளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த 2 பயணிகள் பிடிபட்டனர். அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து அளித்த சிகிச்சை மூலம் கேப்சூல் வடிவில் இருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதேபோல மேலும் 2 பயணிகளிடம் இருந்து போதைப்பொருளை மீட்டனர். இவ்வாறு 4 பயணிகளிடம் இருந்து 7 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.70 கோடி ஆகும். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாந்திராவில்...

இதற்கிடையே மும்பை பாந்திரா மேற்கு குரேஷி நகர் பகுதியில் போதைப்பொருள் விற்க பெண் ஒருவர் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் சந்தேகப்படும்படி வந்த பெண் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் நிலோபர் ஹபீஸ் சேக்(வயது45) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய சோதனையில் 50 கிராம் மெபட்ரோன் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு ெசய்து நிலோபர் ஹபீஸ் சேக்கை கைது செய்தனர். இவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த ரூபினா மற்றும் சபினா ஆகியோரின் கூட்டாளி என்பதும், வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருளை கடத்தி வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்