< Back
மும்பை
இருவேறு சம்பவங்களில் ரூ.75 லட்சம் போதைப்பொருளுடன் 3 பேர் சிக்கினர்
மும்பை

இருவேறு சம்பவங்களில் ரூ.75 லட்சம் போதைப்பொருளுடன் 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
1 Oct 2023 1:15 AM IST

மும்பையிலொ இருவேறு சம்பவங்களில் ரூ.75 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் பிடிபட்டனர்

மும்பை,

மும்பை வடலாவில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நடமாடிய நிதின் (வயது38) என்பவரை பிடித்து சோதனை போட்டனர். இதில் அவரிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உயர்தர எம்.டி போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இதேபோல கோரேகாவ் பகுதியில் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி நடமாடிய 2 பேரை பிடித்து அவர்களின் உடைமைகளில் சோதனையிட்டனர். இதில் அவர்கள் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் ஹாசீப் கோர் (38), நதீம் அலி (29) என்பதும், அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்