< Back
மும்பை
பிம்பிரி சிஞ்ச்வாட்டில் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பிய 3 பேர் கைது
மும்பை

பிம்பிரி சிஞ்ச்வாட்டில் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
11 Oct 2023 12:45 AM IST

பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

புனே,

புனே தத்தாவாடே பகுதியில் கடந்த 8-ந் தேதி இரவு கியாஸ் சிலிண்டர் நிரப்பும் பணி நடந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாக அங்கிருந்த மற்ற சிலிண்டர்களும் வெடித்தன. இதனால் அருகே நின்ற 3 பள்ளி பஸ்கள் மற்றும் டெம்போ ஆகியவற்றில் தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இருப்பினும் பஸ்கள், டெம்போ தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து பிம்பிரி சிஞ்ச்வாட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அங்கு சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பியபோது கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்