< Back
மும்பை
காதலர்களை கரம்பிடிக்க வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 3 சிறுமிகள் குஜராத்தில் மீட்பு
மும்பை

காதலர்களை கரம்பிடிக்க வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 3 சிறுமிகள் குஜராத்தில் மீட்பு

தினத்தந்தி
|
18 Sept 2022 8:16 PM IST

காதலர்களை கரம்பிடிக்க வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 3 சிறுமிகளை பால்கர் போலீசார் குஜராத்தில் பத்திரமாக மீட்டனர்.

பால்கர்,

காதலர்களை கரம்பிடிக்க வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 3 சிறுமிகளை பால்கர் போலீசார் குஜராத்தில் பத்திரமாக மீட்டனர்.

சிறுமிகள் மீட்பு

பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 3 சிறுமிகள் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயினர். பெற்றோர் எங்கு தேடியும் சிறுமிகளை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரில் சிறுமிகள் மர்மநபர்களால் கடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இந்தநிலையில் காணாமல் போன சிறுமிகளில் ஒருவர் குஜராத்தில் உள்ள சூரத்திலும், மற்ற 2 பேர் அதே மாநிலத்தில் உள்ள வாபி பகுதியிலும் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து குஜராத் போலீசார் உதவியுடன் சிறுமிகள் 3 பேரையும் பால்கர் போலீசார் மீட்டு நாலாசோப்ரா கொண்டு வந்தனர்.

திடுக்கிடும் தகவல்

அந்த சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதில், 2 சிறுமிகள் ராஜஸ்தானில் உள்ள தங்களின் காதலனுடன் சென்று சேரும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறியதும், 3-வது சிறுமி அவர்களுக்கு துணையாக சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2 சிறுமிகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார். துணைக்கு சென்ற சிறுமியை மட்டும் அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்