< Back
மும்பை
அமெரிக்கா பிரஜைகளை ஏமாற்றி பணமோசடி செய்த 3 பேர் கைது
மாவட்ட செய்திகள்
மும்பை

அமெரிக்கா பிரஜைகளை ஏமாற்றி பணமோசடி செய்த 3 பேர் கைது

தினத்தந்தி
|
28 May 2022 6:35 PM IST

போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கா பிரஜைகளை ஏமாற்றி பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பை பிசனஸ் பார்க் அருகே போலி கால்சென்டர் நடந்து வருவதாக வாஷி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் போலி கால்சென்டர் நடத்தி வந்த ஹரித் பிரசாத் (வயது32), பிரவின் பாட்டீல் (41), அஷிஷ் சுக்லா (30) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் வோல்ப் என்ற இணையதளம் மூலம் அமெரிக்கா நாட்டு பிரஜைகளை தொடர்பு கொண்டு தாங்கள் மருந்து விற்பனை பிரதிநிதி என அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு தேவையான வயகரா மற்றும் பிற மருந்துகளை அனுப்புவதாக கூறி வந்தனர். இதனை நம்பியவர்களிடம் இருந்து கிரெடிட் கார்டு விபரங்களை பெற்று மருந்துகளை அனுப்பாமல் பணமோசடி செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்