822 சிறப்பு ரெயில்கள் மூலம் மத்திய ரெயில்வேக்கு ரூ.283 கோடி வருவாய்
|மத்திய ரெயில்வே சார்பில் இயக்கப்பட்ட 822 சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.283 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே சார்பில் இயக்கப்பட்ட 822 சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.283 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
4,031 சேவைகள்
மத்திய ரெயில்வே 2022-23-ம் ஆண்டில் 822 சிறப்பு ரெயில்களை இயக்கி சாதனை படைத்து உள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டு உள்ள தகவலில்:- மத்திய ரெயில்வே 2022-23-ம் ஆண்டில் 822 விடுமுறை கால சிறப்பு ரெயில்களை இயக்கி சாதனை படைத்து உள்ளது என்பதை பெருமையுடன் கூறிகொள்கிறது. சிறப்பு ரெயில்கள் மூலம் பீகார், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரபிரேதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், பாராயுனி, ஆந்திரா, கேரளா பகுதிகளுக்கு 4 ஆயிரத்து 31 சேவைகள் இயக்கப்பட்டுள்ளது.
ரூ.283 கோடி வருவாய்
சிறப்பு ரெயில்கள் ஆஷாடி ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, தம்மா சக்ரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஹோலி போன்ற பண்டிகைகள், கோடை விடுமுறையின் போது இயக்கப்பட்டவை ஆகும். சிறப்பு ரெயில்களில் 31 லட்சத்து 78 ஆயிரத்து 143 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.282.91 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.