
மாவட்ட செய்திகள்
2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.27 லட்சம் கொள்ளை

கல்யாணில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தானே,
கல்யாணில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். கொள்ளை
தானே மாவட்டம் கல்யாண் மசோபா சவுக் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று காலை பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது 2 ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஞாயிறு அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு வந்த கொள்ளையர்கள் கியாஸ் கட்டர் மூலம் அங்கு இருந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து அதில் இருந்த ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோல்சேவாடி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கோல்சேவாடி இன்ஸ்பெக்டர் சுனில் கவாலி கூறுகையில், " முதல் கட்ட விசாரணையில் 2 கொள்ளையர்கள் மையத்திற்குள் புகுந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிகிறது. எனினும் இந்த கொள்ளையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். " என்றார்.