< Back
மும்பை
9 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் ராய்காட் மாவட்டத்தில் 218 பேர் பலி
மும்பை

9 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் ராய்காட் மாவட்டத்தில் 218 பேர் பலி

தினத்தந்தி
|
20 Oct 2023 1:15 AM IST

ராய்காட் மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் சாலை விபத்துகளில் 218 பேர் உயிரிழந்துள்ளனர்

ராய்காட்,

ராய்காட் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் கடந்த 9 மாதங்களில் நடந்த சாலை விபத்து விவரங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதன்படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அதாவது 9 மாதத்தில் கடலோர பகுதி சாலைகளில் மொத்தம் 516 விபத்துகள் நடந்து உள்ளது. இந்த விபத்தில் 420 பேர் படுகாயமடைந்தனர். மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நடந்த 145 விபத்துகளில் 60 பேர் உயிரிழந்தனர். 157 பேர் படுகாயமடைந்தனர். இதைத்தவிர மும்பை-புனே பழைய நெடுஞ்சாலையில் 24 பேர் உயிரிழந்தனர். விரைவு நெடுஞ்சாலையில் 18 பேர், மாநில நெடுஞ்சாலைகளில் 54 பேர் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 218 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்