< Back
மும்பை
லால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
மும்பை

லால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:30 AM IST

லால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பை கோவண்டி கவுதம் நகரை சேர்ந்தவர் சையத். இவர் தனது நண்பர் அகமது சேக் என்பவருடன் டோங்கிரிக்கு மோட்டார் சைக்கிளில் கடந்த 29-ந்தேதி இரவு புறப்பட்டு சென்றார். பரேல் லால்பாக் மேம்பாலத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான 2 பேரும் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்