< Back
மும்பை
மும்பை
தானேயில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி உள்பட 2 பேர் மீட்பு- பெண் தரகர் கைது
|30 Sept 2022 6:45 AM IST
தானேயில் சிறுமிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி உள்பட 2 பேர் மீட்பு
தானே,
தானேயில் சிறுமிகளை வைத்து விபசாரம் நடந்து வருவதாக மிராபயந்தர்-வசாய்விரார் ஆள்கடத்தல் பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலி வாடிக்கையாளர்களை அனுப்பி விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் விபசாரத்திற்காக சிறுமியை அங்குள்ள ஓட்டலுக்கு பெண் தரகர் ஒருவர் அழைத்து வரவுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் ஓட்டலை கண்காணித்து வந்தனர். அங்கு வந்த பெண், சிறுமி உள்பட 2 பேரை அழைத்து வந்ததை போலீசார் கண்டனர். உடனே அந்த பெண்ணை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த சிறுமி, பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.