< Back
மும்பை
பிவண்டியில் தங்கி இருந்த வங்கதேச பிரஜைகள் 2 பேர் கைது
மும்பை

பிவண்டியில் தங்கி இருந்த வங்கதேச பிரஜைகள் 2 பேர் கைது

தினத்தந்தி
|
19 Aug 2023 12:15 AM IST

பிவண்டியில் தங்கி இருந்த வங்கதேச பிரஜைகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானே மாவட்டம் பிவண்டியில் விட்டல் நகர் பகுதியில் வங்கதேச பிரஜைகள் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதில் 2 பேர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கதேச பிரஜையான சவுகத் அபுல்கலாம் சேக் (வயது30), அபிர் சேக் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிடிபட்டவர்கள் பிளம்பராகவும், மற்றொருவர் கூலி தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்