< Back
மும்பை
வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது
மும்பை

வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
13 Sept 2022 10:12 PM IST

தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது

சில்வாசா,

தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா பகுதியில் மயில்களை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர் கலவுண்டா வனப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் சேர்ந்து அங்கு மயில்களை வேட்டையாடி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் சுவப்னில் பட்டேல், தேஜஸ் பட்டேல் என தெரியவந்தது. 2 பேரையும் வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்