< Back
மும்பை
8 மாதங்களில் 1,809 விவசாயிகள் தற்கொலை
மும்பை

8 மாதங்களில் 1,809 விவசாயிகள் தற்கொலை

தினத்தந்தி
|
15 Oct 2023 1:15 AM IST

மாநிலம் முழுவதும் 8 மாதங்களில் 1,809 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மாநிலம் முழுவதும் 8 மாதங்களில் 1,809 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை

மராட்டியத்தில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் மாநிலத்தில் 1,809 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். அதிகபட்சமாக விதர்பாவில் 907 பேர் உயிரிழந்து உள்ளனர். மரத்வாடாவில் 685 பேரும், வட மராட்டியத்தில் 200 பேரும், மேற்கு மராட்டியத்தில் 17 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த ஆண்டை விட குறைவு

இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் மாநிலத்தில் 1,948 விவசாயிகள் தற்கொலை செய்து இருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு விவசாயிகள் தற்கொலை சம்பவம் 7 சதவீதம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் மரத்வாடா, மேற்கு மராட்டிய மண்டலங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து உள்ளனர். மேற்கண்ட புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்