< Back
மும்பை
மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து 14 வயது சிறுமி பலி
மும்பை

மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து 14 வயது சிறுமி பலி

தினத்தந்தி
|
22 July 2022 7:03 PM IST

மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 வயது சிறுமி பலியானால்.

மும்பை,

குஜராத்தை சேர்ந்த 14 வயது சிறுமி மது. இவள் தானே காப்பூர்பாவடி அருகே பொம்மை விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். மேலும் மும்பை-நாசிக் நெடுஞ்சாலை ஓரமாக குடிசை அமைத்து தங்கி இருந்தாள். இன்று காலை 6 மணி அளவில் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலை ஓரமாக இருந்த குடிசை வீட்டின் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. குடிசையில் உறங்கி கொண்டிருந்த சிறுமி மது லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காப்பூர்பாவடி போலீசார் ராட்சத கிரேன் வரவழைத்தனர். பின்னர் லாரியை அப்புறப்படுத்தி சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்