துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்; கோலாப்பூரை சேர்ந்த பயணி கைது
|துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோலாப்பூரை சேர்ந்த பயணியை கைது செய்தனர்.
மும்பை,
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோலாப்பூரை சேர்ந்த பயணியை கைது செய்தனர்.
ரூ.1.3 கோடி தங்கம்
துபாயில் இருந்து நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய புலனாய்வு பிரிவு சுங்க வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பயணி ஒருவர் உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த 2 கிலோ 454 கிராம் தங்க துகள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க துகள்களின் மதிப்பு ரூ.1.3 கோடி ஆகும்.
கோலாப்பூரை சேர்ந்தவர்
இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். விசாரணையில், அவர் கோலாப்பூரை சேர்ந்த அக்சய் தானாஜி பாட்டீல்(வயது28) என்பது தெரியவந்தது. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கடந்த ஒரு ஆண்டில் மும்பை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 604 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.360 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.