< Back
மும்பை
2 மகள்களை மிரட்டி கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை
மாவட்ட செய்திகள்
மும்பை

2 மகள்களை மிரட்டி கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
30 Jun 2022 10:27 PM IST

2 மகள்களை மிரட்டி கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

மும்பையை சேர்ந்த 38 வயதுடைய நபரின் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில், 16 மற்றும் 14 வயதுடைய 2 மகள்கள், மகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு மூத்த மகள் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் தந்தை மிரட்டி கற்பழித்தார்.

இதைதொடர்ந்து இளைய மகளையும் மிரட்டி கற்பழித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டாக தந்தையின் கொடுமை தொடர்ந்துள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சிறுமிகள் அக்கம் பக்கத்தினரிடம் தங்களுக்கு நேர்ந்துவரும் கொடுமைகளை விவரித்தனர். மேலும் அவர்களின் உதவியுடன் போலீசில் தந்தை மீது புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். மேலும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவில் தந்தை மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்