< Back
மும்பை
அந்தேரி- கோரேகாவ் இடையே 10 மணி நேர ரெயில் போக்குவரத்து ரத்து
மும்பை

அந்தேரி- கோரேகாவ் இடையே 10 மணி நேர ரெயில் போக்குவரத்து ரத்து

தினத்தந்தி
|
26 Oct 2023 1:15 AM IST

அந்தேரி- கோரேகாவ் இடையே 10 மணி நேர ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது

மும்பை,

கார் ரோடு மற்றும் கோரேகாவ் ரெயில் நிலையத்திற்கு இடையே டிரான்ஸ்ஹார்பர் லைனில் 6-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன் சேர்த்து ரெயில் பாதை மற்றும் பிற தொடர்புடைய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அந்தேரி- கோரேகாவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே 10 மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "26-ந் தேதி (இன்று) நள்ளிரவு 12.30 மணி முதல் 27-ந் தேதி காலை 10.30 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தேரி மற்றும் கோரேகாவ் இடையே துறைமுக பாதையில் புறநகர் சேவைகள் மேற்கண்ட நேரத்தில் இயக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்