< Back
மும்பை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
மும்பை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
12 July 2022 11:38 AM GMT

7 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தானே,

7 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கடத்தி பலாத்காரம்

தானே கோட்பந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் சாஜத் (வயது26). பழைய பொருட்கள் விற்கும் வியாபாரியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்ததை கண்டு, அவளை மறைவிடத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தாள். இதன்படி பெற்றோர் சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

10 ஆண்டு கடுங்காவல்

அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது பற்றி அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சிறுமி கொடுத்த தகவலின் படி வியாபாரி சாஜத்தை பிடித்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து குற்றவாளி சாஜத்விற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்