< Back
பெங்களூரு
மரம் சாய்ந்து விழுந்து தொழிலாளி சாவு
பெங்களூரு

மரம் சாய்ந்து விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
22 Jun 2022 8:48 PM IST

பெங்களூருவில், மரம் சாய்ந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு யஷ்வந்தபுரம் ஐ.ஐ.எஸ்.சி. வளாக பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லை சேர்ந்த வசந்த்(வயது 33) உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் வசந்த் உள்ளிட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு மரம் வேரோடு சாய்ந்து ஐ.ஐ.எஸ்.சி. வளாக சுவரின் மீதும், அங்கு வேலை செய்து கொண்டு இருந்த வசந்த் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வசந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்