< Back
பெங்களூரு
பிரமாண்ட தேசிய கொடியுடன்:  நந்தி மலைப்பகுதியில் சுதந்திர தினம் கொண்டாட்டம் ஏற்பாடு
பெங்களூரு

பிரமாண்ட தேசிய கொடியுடன்: நந்தி மலைப்பகுதியில் சுதந்திர தினம் கொண்டாட்டம் ஏற்பாடு

தினத்தந்தி
|
14 Aug 2022 11:21 PM IST

பிரமாண்ட தேசிய கொடியுடன் நந்தி மலைப்பகுதியில் சுதந்திர தினம் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோலார் தங்கவயல்:

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநில முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நந்தி மலைப்பகுதியில் முதல் முறையாக சுதந்திர தின பவளவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா சார்பில் செய்யப்பட்டுள்ளது. மிகபிரமாண்ட தேசிய கொடி பறக்கவிடப்பட உள்ளது.

இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. அண்மையில் நந்தி மலைப்பகுதியில் சர்வதேச யோகா தினம் ெகாண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்