< Back
பெங்களூரு
காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம்
பெங்களூரு

காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம்

தினத்தந்தி
|
22 Oct 2023 2:46 AM IST

காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்தார்.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லை அடுத்த கக்கிபிக்கி காலனியை சேர்ந்தவர் சிக்கமுத்தையா(வயது 34). இவர் பன்னரகட்டா வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிக்கமுத்தையா வேலை முடிந்து கத்தஹள்ளி அருகே தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டுயானை, சிக்கமுத்தையாவை தாக்கி தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காலால் அவரை மிதித்தது. பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சிக்கமுத்தையா, தற்போது ஜிகினி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் கத்தஹள்ளி பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவர்கள் காட்டுயானை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்