மடிகேரி தலைக்காவிரியில் நாளை தீர்த்த உற்சவம் நடக்கிறது
|மடிகேரியில் உள்ள தலைக்காவிரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காவிரி தீர்த்த உற்சவம் அதிகாலை 1.27 மணிக்கு நடக்கிறது.
குடகு-
மடிகேரியில் உள்ள தலைக்காவிரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காவிரி தீர்த்த உற்சவம் அதிகாலை 1.27 மணிக்கு நடக்கிறது.
காவிரி தீர்த்த உற்சவம்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே தலைக்காவிரியில் காவிரி நதி உற்பத்தியாகிறது. கர்நாடகம், தமிழகம் மக்களின் ஜீவாதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி பகுதியில் ஆண்டுதோறும் காவிரி தீர்த்த உற்சவம் என்ற பெயரில் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், இந்த ஆண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) காவிரி தீர்த்த உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. நாளை அதிகாலை 1.27 மணிக்கு காவிரி தீர்த்த உற்சவம் நடக்கிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்.
ஏற்பாடுகள் தீவிரம்
இந்த காவிரி தீர்த்த உற்சவத்துக்கான ஏற்பாடுகள் தலைக்காவிரியில் தீவிரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் செல்லவும், முக்கிய பிரமுகர்கள் செல்லவும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. தலைக்காவிரி பிரதான நுழைவுவாயிலில் மின்விளக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தலைக்காவிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.