< Back
பெங்களூரு
காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி
பெங்களூரு

காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

வருமான வரி சோதனை நடந்த காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

பெங்களூரு:

வருமான வரி சோதனை நடந்த காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு அனுமதி

அரசு காண்டிராக்டர்களுக்கு பாக்கித்தொகை பட்டுவாடா செய்யாமல் இருப்பதற்கு, பா.ஜனதாவே காரணம். முந்தைய ஆட்சியில் திட்ட மதிப்பீட்டை விட மூன்று மடங்கு செலவு செய்துள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு முந்தைய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு செய்தால், திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வழங்க முடியும்?. அதனால் தான் காண்டிராக்டர்களுக்கு பாக்கியை பட்டுவாடா செய்ய முடியவில்லை.

நாங்கள் பாக்கியை பட்டுவாடா செய்வதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறோம். இதில் ஏதாவது கமிஷன் பெறப்படுவதாக இருந்தால் அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

வருமான வரி சோதனை

நாட்டில் பா.ஜனதா அரசு வந்த பிறகு 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடந்துள்ளன. பெங்களூருவில் நடந்த சோதனை பற்றி எனக்கு தெரியாது. காண்டிராக்டரின் வீட்டில் சோதனை நடப்பதாக கூறினர். பொதுவாக காண்டிராக்டர்கள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். கட்சி பேதமின்றி அவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறார்கள்.

வருமான வரி சோதனை நடந்த காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. சோதனையில் சிக்கிய பணம் காங்கிரசுக்கு சேர்ந்தவை என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?.

இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

மேலும் செய்திகள்