போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு ரவுடி தப்பி ஓட்டம்
|ரவுடியை பிடிக்க சென்றபோது போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார்.
பெங்களூரு:
பெங்களூரு சதாசிவநகரை சேர்ந்தவர் ஹசன்கான். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக அதே பகுதியை சேர்ந்த சையது சமியுல்லாகான் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹசன்கானை, குற்றப்பிரிவு போலீசார் பிடிக்க சென்றனர்.
அப்போது அவர்களுடன் சையது சமியுல்லாகானும் சென்றார். அந்த சமயத்தில் அவர் ஹசன்கானை மடக்கி பிடித்தார். அப்போது ஹசன்கான், போலீஸ்காரர் சையது சமியுல்லாகானை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டப்பகலில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியினரை பீதியில் ஆழ்த்தி உள்ளது.