வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடியவர் கைது
|சித்ரதுர்காவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சித்ரதுர்கா:-
சித்ரதுர்கா மாவட்டம் அப்பினஒலே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து சித்ரதுர்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மர்மநபர்கள் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றிருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சித்ரதுர்கா போலீசார் நகை திருட்டில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று திருட்டு வழக்கு தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கல்யாணதுர்கா கிராமத்தை சேர்ந்த மயில்சாமி (வயது 45) என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அப்பினஒலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.