< Back
பெங்களூரு
கோலார் டவுனில் பயங்கரம்: கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை
பெங்களூரு

கோலார் டவுனில் பயங்கரம்: கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை

தினத்தந்தி
|
26 May 2022 10:34 PM IST

கோலார் டவுனில் தொழிலாளியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோலார்:

தொழிலாளி

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா நுக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்(வயது 37). இவர் தற்போது கோலார் சவுடேஸ்வரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தொழிலாளியான இவரை நேற்று

முன்தினம் இரவு சிலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள் அப்பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு வருமாறு சரணை அழைத்துள்ளனர்.அதன்பேரில் சரணும் அங்கு சென்றுள்ளார். அங்கு வைத்து சரணுக்கு அவர்கள் வலுக்கட்டாயமாக மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் மதுபோதையில் இருந்த சரணுக்கும், அவரை அழைத்தவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

படுகொலை

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், கத்தியால் சரணை சரமாரியாக குத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி கோலார் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சரணை கொன்ற மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் கோலார் டவுன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்