< Back
பெங்களூரு
புதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பெங்களூரு

புதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

தொலைந்துபோன செல்போனுக்கு பதில் புதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொைலை செய்து கொண்டார்.

சித்ரதுர்கா-

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெேர தாலுகா ெகாலால் கிராமத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் (வயது 20). இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அந்தப்பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அதில் யஸ்வந்த் கலந்துகொண்டார். மேலும் விநாயகர் சிலையை கரைக்க குளத்துக்கு சென்றபோது, அவரது செல்போன் குளத்துக்குள் விழுந்து மாயமானது. இதனால் யஸ்வந்த் மனமுடைந்து காணப்பட்டார்.

மேலும் அவர் தனது தாத்தாவிடம் புதிய செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவர், வெங்காயம் சாகுபடி ெசய்துள்ளதாகவும், அதனை விற்று செல்போன் வாங்கி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் தனக்கு உடனடியாக செல்போன் வேண்டும் என்றும் யஸ்வந்த் கேட்டு அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது தாத்தா மறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட யஸ்வந்த், கடந்த 18-ந்தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை யஸ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சித்ரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்