< Back
பெங்களூரு
பண்ட்வால் அருகே  கார் மோதி இளம்பெண் பலி
பெங்களூரு

பண்ட்வால் அருகே கார் மோதி இளம்பெண் பலி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:00 AM IST

பண்ட்வால் அருகே கார் மோதி இளம்பெண் பலியானார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா வீரமபா கிராமத்தைச் சேர்ந்தவர் பாவனா. இவர் பண்ட்வால் டவுன் பி.சி.ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் இவர் வேலை முடிந்து பண்ட்வாலில் இருந்து டவுன் பஸ்சில் வீரமபா கிராமத்திற்கு வந்தார்.

பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவர் சாலையோரம் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாவனா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாவனா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ட்வால் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பாவனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து புத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்