< Back
பெங்களூரு
தையல்காரர் அடித்து கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பெங்களூரு

தையல்காரர் அடித்து கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
11 July 2022 8:40 PM IST

பெங்களூருவில் தையல்காரரை அடித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு கொடிகேஹள்ளி சர்க்கிளில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் பலத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் கொடிகேஹள்ளி போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

அவர் தையல்காரர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. பணப்பிரச்சினை காரணமாக அவருக்கும், மர்மநபர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதும், அவர்கள் தான் அடித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்