மகன் கழுத்தை அறுத்துக்கொலை; மனைவிக்கு அரிவாள் வெட்டு:விவசாயி கைது
|நடந்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகனை கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பெலகாவி:
பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா சில்டிபவி கிராமத்தை சேர்ந்தவர் மகிதப்பா அக்கன்னி (வயது 38). விவசாயி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 4 வயதில் பாலேஷ் என்ற மகன் உண்டு. இந்த நிலையில் லட்சுமியின் நடத்தையில் மகிதப்பாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மனைவியுடன் அவர் தகராறு செய்து வந்தார். அதுபோல் நேற்று காலை கணவன்-மனைவி, மகன் ஆகியோர் தங்களது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அந்த சமயத்தில் லட்சுமியுடன் தகராறு செய்த மகிதப்பா, திடீரென்று கதிர் அரிவாளால் லட்சுமியின் கழுத்தை அறுத்தார்.
மேலும் மகன் பாலேசின் கழுத்தையும் அவர் அறுத்தார். இதில் பாலேஷ் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தான். படுகாயமடைந்த லட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோகாக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகிதப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.